உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனவு இல்ல திட்ட பயனாளிகள் வரும் 30ல் கிராமசபை கூட்டம்

கனவு இல்ல திட்ட பயனாளிகள் வரும் 30ல் கிராமசபை கூட்டம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்திலும் வரும், 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. மாவட்டத்தில் அனைத்து பஞ்., பகுதியிலும் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் (ஓடுகள், சாய்ந்த ஆர்.சி.சி., மேற்கூரை வீடுகளுக்கு சிறிய மற்றும் பெரிய பழுதுகளை சரி செய்தல்) மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம அளவிலான குழு மூலம் பயனாளி தேர்வு செய்யப்படவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி