உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருட பஞ்சமியையொட்டி 10,108 சகஸ்ர தீபம்

கருட பஞ்சமியையொட்டி 10,108 சகஸ்ர தீபம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், 10,108 மகா சகஸ்ர தீப அலங்காரம் செய்யப்பட்டது.மார்கழி வெள்ளிக்கிழமையான, நேற்று கருட பஞ்சமியையொட்டி, காலை, 6:00 மணிக்கு யாக வேள்வியுடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து, 21 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு லட்சுமி நாராயண பெருமாளுக்கும், கரு டாழ்வார் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு கோவிலின்உள்புறத்தில் வேண்டிய வரம் கிடைக்க, 10,108 மகா சகஸ்ரதீப விளக்குகள் பக்தர்களால் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவில் உட்பிரகாரத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ