நம்பியூர்: நம்பியூர் அருகேயுள்ள எலத்துார் குளத்தில், பறவைகள் கணக்-கெடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். சமீபத்தில் பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்ட எலத்துார் ஏரியில் நடந்த கணக்கெடுப்பில், 127 வகையான பறவைகள் வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 34 வகையான பறவைகள் வெளிநாட்டில் இருந்து வலசை வந்துள்ளது. குறிப்பாக குளிர் காலத்தில் உணவுக்காக மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து ஊசிவால் வாத்து, தட்டைவாயன், கிளுவை, வெண்புருவ வந்து, மண்கொத்தி, பச்சை காலி, விசிறிவால் உள்ளான், சேற்று பூனைப்பருந்து, மஞ்சள் வாலாட்டி, மீசை ஆலா, சூறைக்குருவி உள்ளிட்ட பல்வேறு பறவைகள், இந்த ஆய்வில் பதிவு செய்யப்-பட்டுள்ளது.இத்துடன், 93 வகையான உள்ளூர் பறவை இனங்களும் வாழ்-வது கண்டறியப்பட்டுள்ளன. இதில், 24 உள்ளூர் பறவை இனங்கள் எலத்துார் குளத்தில் இனப்பெருக்கம் செய்து வாழ்விட-மாக கொண்டிருப்பதை கண்டறிந்தனர். குளத்தின் நடுவில் உள்ள சிசு மரங்களில், நீர்க்காகம் மற்றும் பாம்புதாரா பறவைகளின் கூடுகள் கண்டறியப்பட்டன. இரவு நேரத்தில், 5,000க்கும் மேற்-பட்ட கொக்குகள், சூறைக் குருவிகள், நாரைகள், வாத்துக்கள் மற்றும் பல பறவைகள் தங்குவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூழல் அறிவோம் குழுவை சார்ந்த தீபக் வெங்கடாசலம், எலத்துார் பல்லுயிர் மேலாண்மை குழு ரவிக்குமார் மற்றும் வைல்டு விங்க் அமைப்பினர் வனத்துறையுடன் இணைந்து இதில் ஈடுபட்டனர்.ஆய்வில் கண்டறியப்பட்ட பறவைகளை, நிரந்தரமாக பாது-காக்க வனத்துறை சார்பாக நிரந்தர பணியாளர் ஒருவரை நிய-மித்து, இந்த வாழ்விடத்தையும் அருகில் உள்ள நாகமலை குன்-றையும் பாதுகாக்க, உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.