உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிற்சங்கத்தினர் மறியலில் 258 பேர் கைது

தொழிற்சங்கத்தினர் மறியலில் 258 பேர் கைது

ஈரோடு : உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். 44 தொழிலாளர் நலச்சட்டங்களை, 4 தொகுப்புகளாக மாற்றியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய அளவில் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தத்துடன், ஈரோடு காளை மாட்டு சிலை அருகே மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், எல்.பி.எப்., கோபால், ஏ.ஐ.டி.யு.சி., சின்னசாமி, எச்.எம்.எஸ்., சண்முகம் உட்பட பலர் மறியலில் ஈடுபட்டனர். காளை மாட்டு சிலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனை நோக்கில் செல்ல முயன்ற, 54 பெண்கள் மற்றும், 154 ஆண்கள் என, 258 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி