| ADDED : மார் 02, 2024 03:28 AM
சத்தியமங்கலம்: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்துார் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன். காட்டாங்குளத்துார் ஒன்றிய துணை சேர்மேனாகவும் இருந்தார். வண்டலுாரில் மேம்பாலம் அருகே கடந்த மாதம், 29ம் தேதி இரவு காரில் சென்றார். அப்போது மர்ம கும்பல் நாட்டு குண்டுகளை வீசியது. காரில் இருந்து தப்பி ஓடியவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில் இறந்தார். மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது. இந்நிலையில் கொலை தொடர்பாக, வண்டலுார் முனீஸ்வரன், 22; மண்ணிவாக்கம் சத்தியசீலன், 20; திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் சம்பத்குமார், 20, மணிகண்டன், 20; திண்டுக்கல்லை சேர்ந்த, 17 வயது சிறுவன் என ஐந்து பேர், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில், நீதிபதி உமா தேவி முன், நேற்று மதியம் சரணடைந்தனர். இதில் நான்கு பேரை, ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவனை அடைக்க உத்தரவிட்டார்.