உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உற்சாகத்தை இழந்த பூப்பறிக்கும் திருவிழா

உற்சாகத்தை இழந்த பூப்பறிக்கும் திருவிழா

சென்னிமலை: சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில், தை மாதத்தின் இரண்டாவது நாளில், பூப்பறிக்கும் திருவிழா நடக்கிறது. நுாற்றாண்டாக நடக்கும் இந்த விழாவில், இளம்பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர், பெரியவர்கள் என பலரும், சுற்றுப்பகுதியில் உள்ள மலைக்கு சென்று ஆவாரம் பூப்பறித்து கொண்டாடுவர். வீட்டில் இருந்து தின்பண்டங்கள் எடுத்து செல்வர். மலையில் அதை பகிர்ந்துண்டு, பூப்பறித்தும், பாட்டுப்பாடியும், கும்மிடியத்தும் பொழுதை கழிப்பர். இந்த வகையில் தை மாத இரண்டாவது நாளான நேற்று, பூப்பறிக்கும் விழா நடந்தது. இந்த நாளில் பெரும்பாலான மக்கள் மணிமலைக்கு சென்று பூப் பறிப்பர். வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர். ஆனால், நேற்று நடந்த நிகழ்வில், நுாற்றுக்கும் குறைவான மக்களே, மலைக்கு சென்றனர். இதனால் களை கட்டும் விழா, உற்சாகத்தை இழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை