உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு பாரில் வாலிபரை தாக்கிய 10 பேர் கும்பல்

ஈரோடு பாரில் வாலிபரை தாக்கிய 10 பேர் கும்பல்

ஈரோடு : ஈரோடு, சூரம்பட்டி வலசு பஸ் ஸ்டாப் அருகேயுள்ள பாரில் நேற்று மதியம், 12:30 மணிக்கு சூரம்பட்டி வலசை சேர்ந்த மணிகண்டன், 24, என்ற வாலிபர் இருந்துள்ளார். அவரை ஈரோடு அணைகட்டு பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கினர். இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார். இச்சம்பவத்தால், டாஸ்மாக் பார் போர்க்களமாக காட்சியளித்தது. சூரம்பட்டி போலீசார் மணிகண்டனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக நேற்று முன்தினம் மணிகண்டன், சதீஷின் சட்டையை பிடித்து மிரட்டல் விடுத்து எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, மணிகண்டன் தனியாக இருப்பதை அறிந்து தனது அடியாட்களுடன் வந்த சதீஷ், தாக்கியதாக கூறப்படுகிறது. சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ