உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்ரீ வெங்கடேஷ்வரா வித்யாலயா 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ஸ்ரீ வெங்கடேஷ்வரா வித்யாலயா 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ஈரோடு,: கோபி அருகே தாசம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, 20வது ஆண்டாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவன் எம்.ரூபக், மாணவியர் எஸ்.கீர்த்தி, எஸ்.வினோதா ஆகியோர், 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்றனர். மாணவிகள் பி.சன்சுலா, பி.காவ்யா, 492 மதிப்பெண் எடுத்து அடுத்த இடங்களை பிடித்தனர். கணித பாடத்தில், 20 பேரும், அறிவியல் பாடத்தில் ஒன்பது பேரும், சமூக அறிவியலில் ஐந்து பேரும், 100க்கு 100 மதிப்பெண் எடுத்தனர்.490க்கு மேல் ஆறு மாணவர்கள், 485க்கு மேல் 13 பேர்; 480க்கு மேல் 21 பேர்; 470க்கு மேல் 30 பேர்; 460க்கு மேல் 53 பேர்; 400க்கு மேல் 93 பேரும் மதிப்பெண் பெற்றனர்.மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாண வியரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமங்களின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் எம்.எல்.ஏ., ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம், இயக்குனர்கள் செங்கோட்டையன், முருகுசாமி, ஜோதிலிங்கம், ராசு மற்றும் ஆசியர்கள், பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை