| ADDED : டிச 31, 2025 05:39 AM
கோபி: கொடிவேரி தடுப்பணை வளாக சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்களை, பெரியவர்கள் பயன்படுத்துவதால் விரைவில் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வளா-கத்தில் உள்ள சிறுவர் பூங்காவில், துாரி, ராட்-டினம், சீஸா என விளையாட்டு உபகரணம் உள்-ளது. சிறுவர்கள் மட்டுமே இவற்றில் விளையாட முடியும். ஆனால் பூங்காவுக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாலிபர்கள் முதல் முதிய-வர்கள் வரை, ஆண்-பெண் வித்தியாசமின்றி, உபகரணங்களை பார்த்ததும் தாங்களும் குழந்-தையாக மாறி விடுகின்றனர். தாங்குமா, தாங்-காதா என்றெல்லாம் யோசிக்காமல், சிறுவர்க-ளுக்கு இணையாக ஏறி ஆட்டம் போடுகின்றனர். இதனால் எடை தாளாமல் விளையாட்டு உபகர-ணங்கள் விரைவில் கட்டமைப்பு இழக்கிறது. பல சேதமாகின்றன. இதனால் சிறுவர்கள் பயன்ப-டுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்-பட்ட நீர் வள ஆதாரத்துறையினர், விளையாட்டு உபகரணங்களின் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பலகை வைக்கலாலம். அல்லது கூட்டம் அதிக-ரிக்கும் நாட்களில், பூங்காவுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது.