உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விடுமுறையில் ஊருக்கு வந்த ஐ.டி., ஊழியர் விபத்தில் பலி

விடுமுறையில் ஊருக்கு வந்த ஐ.டி., ஊழியர் விபத்தில் பலி

சென்னிமலை:சென்னிமலை அருகேயுள்ள திப்பம்பாளையத்தை சேர்ந்த மணி மகன் சுத்தானந்தன், 34; சென்னையில் ஐ.டி., நிறுவன ஊழியர். இவரின் மனைவி நித்யா, 29; தம்பதியருக்கு நான்கு வயதில் ஒரு மகள் உள்ளார். விடுமுறை என்பதால், சென்னிமலை அருகே செந்துார் கார்டனில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு மனைவி, மகளுடன் சுத்தானந்தன் வந்திருந்தார்.ராயல் என்பீல்டு புல்லட்டில், சுத்தானந்தன் நேற்று காலை, ௮:௩௦ மணிக்கு, சென்னிமலை-ஈங்கூர் சாலையில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். டேங்கர் லாரியை முந்த முயன்றபோது, எதிரே சென்னிமலை, ஜீவா நகரை சேர்ந்த கோபி, யமஹா கிரக்ஸ் பைக்கில் வந்தார்.கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் மீது புல்லட் மோதி, கட்டுப்பாட்டை இழந்த சுத்தானந்தன், டேங்கர் லாரி பின் சக்கரத்தில் விழுந்ததில் உடல் நசுங்கி பலியானார். மனைவி நித்யா புகாரின்படி, சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி