உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கி மூதாட்டி சாவு

யானை தாக்கி மூதாட்டி சாவு

சத்தியமங்கலம்:தாளவாடி அருகே நெய்தாளபுரத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, அந்த பகுதியில் உள்ள குமார் என்பவரது கரும்பு தோட்டத்தில், நேற்று காலை புகுந்தது. கரும்புகளை தின்று விட்டு சென்றது. அதேசமயம் அவ்வழியாக இயற்கை உபாதை கழிக்க காளம்மாள், 65, என்ற மூதாட்டி சென்றார். யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளித்து, சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக தாளவாடி வனத்துறையினர், ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி