உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீன் வள உதவியாளர் பணிக்கு அழைப்பு

மீன் வள உதவியாளர் பணிக்கு அழைப்பு

ஈரோடு, :பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில், காலியாக உள்ள மீன் வள உதவியாளர் பணிக்கு, இனச்சுழற்சி முறையில் தேர்வு செய்ய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் தவிர, முன்னுரிமையற்றவர்) என நிரப்பப்படும். தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். நீச்சல், மீன் வலை வீசுதல், வலை பின்னுதல், அறுந்த வலைகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன், 'மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம், எண்-5, மின்மனை சாலை, பவானிசாகர்-638451' என்ற முகவரிக்கு டிச.,5ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் நேரில் அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை