உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

சென்னிமலை கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

சென்னிமலை, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.கடந்த சில ஆண்டுகளாக, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் தோட்டங்களில் தனியாக வசித்து வந்த, முதிய தம்பதியரை குறி வைத்து ஆறு இடங்களில், 12 கொடூர கொலைகள் நடந்துள்ளன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே குட்டக்காட்டு தோட்டம் மற்றும் கரியங்காட்டு தோட்டம் பகுதியில் தம்பதியரை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இதில் கேரளா மாநிலம் மற்றும் நீலகிரி, திருப்பூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த, 11 பழைய குற்றவாளிகள்தான் இச்சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலையான் தோட்டத்தில், மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட விசாரணையாக, சென்னிமலை, சிவகிரி பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள், கோடாரி எடுத்த இடம் உட்பட பல இடங்களை போலீசார் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை