உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

காங்கேயம் : திருப்பூர் மாவட்டம், காங்கேயம், தேவாங்கபுரம் சவுடேஸ்வரி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 26ம் தேதி குத்துவிளக்கு பூஜை, 29ம் தேதி மாரியம்மனுக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர். நேற்று, காசி விஸ்வநாதர் ஆலய குளக்கரையில் இருந்து, பூவோடு எடுத்து வந்து மாரியம்மனுக்கு செலுத்தப்பட்டது.ஏராளமான் பக்தர்கள் அலகு குத்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலையில் மாவிளக்கு வழிபாடு, பரிவட்டம் கொண்டு வந்து மாரியம்மனுக்கு செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இன்று சவுண்டம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ