உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓவிய போட்டியில் குழந்தைகள் ஆர்வம்

ஓவிய போட்டியில் குழந்தைகள் ஆர்வம்

ஈரோடு, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலை பள்ளி, கொங்கு சிறப்பு பள்ளி, அரிமா சிறப்பு பள்ளி, கோகுலம் சிறப்பு பள்ளி, உதயம் சிறப்பு பள்ளி, அன்பு சிறப்பு பள்ளியில் படிக்கும், 81 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச.,3ல் பரிசு வழங்கப்படும். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்