உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மூழ்கி நிறுவன மேலாளர் பலி

வாய்க்காலில் மூழ்கி நிறுவன மேலாளர் பலி

பெருந்துறை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த நல்லிபாளையம், புதுபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன், 41; திருமணம் ஆகாதவர். பெருந்துறை செட்டிதோப்பில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் ஈரோடு ரோட்டில் வாய்க்காலில் துணி துவைக்க சென்றவர் மாலையாகியும் திரும்பவில்லை.இதனால் நிறுவன தொழிலாளர்கள் தேடி சென்றனர். கரையில் அவர் பைக், துவைக்க எடுத்து சென்ற துணி இருந்தது. பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் தேடினாலும், இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில் பல்லகவுண்டன் தோட்டம் என்ற இடத்தில், மனோகரன் உடல் நேற்று கரை ஒதுங்கியது. தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து, பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ