உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்சி தலைவர் தேர்வு காங்., ஆலோசனை

கட்சி தலைவர் தேர்வு காங்., ஆலோசனை

ஈரோடு, ஈரோடு வட்டார காங்., சார்பில், புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், முன்னாள் வட்டார தலைவர் நடராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அகில இந்திய காங்., மேலிட பார்வையாளர் லோபோ பேசியதாவது:கிராமம், வட்டாரம், மாவட்ட அளவில் கட்சியினரை சந்தித்து மாவட்ட தலைவரை தேர்வு செய்வது பற்றி பேசி, விண்ணப்பம் பெறுகிறோம். கட்சியை பலப்படுத்த, யாரை மாவட்ட தலைவராக நியமிக்கலாம், என கருத்தை கூறலாம். சாமானிய தொண்டர்களும் மாவட்ட தலைவராகலாம்.இவ்வாறு பேசினார்.* கோபியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கும் லோபா நேற்று சென்றார். நிர்வாகிகள் மத்தியில், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவரை தேர்வு செய்வது குறித்து பேசினார். நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி