உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே நுழைவுபாலத்தில் தேங்கும் மழைநீரால் பாதிப்பு

ரயில்வே நுழைவுபாலத்தில் தேங்கும் மழைநீரால் பாதிப்பு

ஈரோடு, ஈரோடு-சென்னிமலை ரோட்டில் உள்ள கே.கே.நகர் அருகில், ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. மழைக்காலத்தில் பாலம் அமைந்துள்ள பகுதியில், குளம்போல் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால் போக்குவரத்தும் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக மாநகரில் மழை பெய்து வரும் நிலையில், நுழைவு பாலத்தில் உள்ள வடிகால்களில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் அதிகரித்து சாலைகளில் வெளியேறுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது.சகதியாகும் காய்கறி சந்தைஈரோடு வ.உ.சி., மைதானத்துக்கு எதிரில், நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. நேற்று முன்தினம் மதியம், நள்ளிரவு, நேற்று காலை என பெய்த மழையால், மார்க்கெட்டின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி, காய்கறி வாங்க வந்த மக்கள் நேற்று சிரமப்பட்டனர். மார்க்கெட் வழித்தடங்கள் சேறு, சகதியாக மாறியதால் வாகனங்களில் வந்த காய்கறிளை இறக்க முடியாமல் வியாபாரிகள் அவதியுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை