உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி சாலை பணியில் பலி: பெண் உடலை பெற மறுத்து மறியல்

மாநகராட்சி சாலை பணியில் பலி: பெண் உடலை பெற மறுத்து மறியல்

பெருந்துறை : ஈரோட்டை அடுத்த பெரியசேமூர், எஸ்.எஸ்.பி., நகரில் மாநகராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த, பவானி, பெரியபுலியூரை சேர்ந்த பிரபாகரன் மனைவி சரஸ்வதி, 30, கலவை இயந்திரத்தில் சிக்கியதில் பலியானார். அவரது உடல், பிரதே பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் சரஸ்வதி குடும்பத்துக்கு, அரசு சார்பில் இழப்பீடு கேட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், உடலை பெற மறுத்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பெருந்துறை ஒன்றிய வி.சி., செயலாளர் முரளி தலைமையில், மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் சாலை அமைக்கும் பணியில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. இதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.சி., மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில், நேற்று மனு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்