உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணையில் வண்டல் மண் அள்ள அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்

அணையில் வண்டல் மண் அள்ள அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்குவது வழக்கம். கடந்த ஆறு ஆண்டுகளாக அணை நீர்மட்டம் குறையாததால் இதற்கு அனுமதி தரவில்லை.தற்போது அணை நீர்மட்டம், 51 அடியாக உள்ளதால் வண்டல் மண் அள்ள அனுமதிக்குமாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் அறிவித்தனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.சத்தி டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், பொதுப்பணித்துறை அலுவலக நுழைவு வாயில் முன் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் காத்திருப்பு போராட்டம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாறியது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் நடராஜ் தலைமையிலான விவசாயிகள், மண் அள்ள அனுமதி கோரி கோஷமிட்டனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வண்டல் மண் அள்ள அனுமதி வழங்குவதில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். மேலும் காலம் தாழ்த்தினால், விவசாயிகள் ஒன்றிணைந்து பவானிசாகர் அணைக்கு சென்று மண் அள்ளுவோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை