உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை முதல்வர் உதயநிதி இன்று ஈரோடு வருகை

துணை முதல்வர் உதயநிதி இன்று ஈரோடு வருகை

ஈரோடு: சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் இன்று மதியம், 12:00 மணிக்கு துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி நடக்கிறது.கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில், நகர்புற இளைஞர்களுக்கும் உபகரணம் வழங்கப்படுகிறது. இதன்-படி மாவட்டத்தில் மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள், 41 டவுன் பஞ்., இளைஞர்களுக்கு இவ்விழாவில் வழங்கப்படுகிறது. தவிர மக்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி, எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ