உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உறவினர்களைத் தேடி வேட்பாளர்கள் வலை

உறவினர்களைத் தேடி வேட்பாளர்கள் வலை

ஈரோடு: வரும் உள்ளாட்சியில் நிலவும் போட்டியால், வேட்பாளர்கள் ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள, உறவினர்களுக்கு வலைவீசுகின்றனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிடுவதால், கடும் போட்டி நிலவி வருகிறது. பிரச்சாரத்துக்கு இன்னும் எட்டு நாட்களே மிச்சம் உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் இரவிலும் வார்டுகளுக்கு சென்று ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னனி கட்சிகள் தனித்து போட்டியிடும் காரணமாக, நடப்பு உள்ளாட்சியில் அதிகளவு சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இதனால், பெருமளவு கட்சிகளுக்கு ஓட்டு வங்கி சிதற வாய்ப்புள்ளதால், சுயேட்சைகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதன்படி, சிட்டிங் கவுன்சிலர்களும் எப்படியும் பதவியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு கோணங்களில் முனைப்பு காட்டி வருகின்றனர். உறவினர்கள், ஜாதிக்காரர்கள், நண்பர்கள் என பல வகையிலும் தேடிப்பிடித்து ஆதரவு கோருகின்றனர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுள்ள உறவினர்களையும், தேர்தலுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடும் ஜரூராக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி