உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 மாதமாக வீணாகும் குடிநீர் அந்தியூர் பேரூராட்சி மெத்தனம்

2 மாதமாக வீணாகும் குடிநீர் அந்தியூர் பேரூராட்சி மெத்தனம்

அந்தியூர் : அந்தியூர் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானி ஆற்று குடிநீர் சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யப்படுகிறது. பேரூராட்சி ஏழாவது வார்டு பத்ரகாளியம்மன் கோவில் அருகே, செல்லீஸ்வரர் கோவில் செல்லும் சாலை முன்புறத்தில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரண்டு மாதமாக தண்ணீர் வீணாக செல்கிறது.இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம், மக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உடைந்த குழாய் பகுதியில், இருசக்கர வாகனத்தின் டயர், டியூப் கொண்டு உடைப்பை அடைக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டனர். இதனால் பெருமளவில் வீணாவது தடுக்கப்பட்டாலும், தற்போதும் சிறிதளவு தண்ணீர் வீணாகிறது. மக்களின் தற்காலிக நடவடிக்கையே போதும் என்று, நிரந்தர நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறந்து விட்டதாக, மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை