உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிரைவர் மரணம்: மனைவி புகார்

டிரைவர் மரணம்: மனைவி புகார்

ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டிவலசு பாண்டியன் வீதியை சேர்ந்தவர் கண்ணன், 38. டிராவல்ஸ் வேன் டிரைவர். கடந்த, 17ல் வாடகை முடித்து, அணைக்கட்டு சாலை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தூங்கினார். நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள பாத்ரூமிற்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். கண்ணனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சூரம்பட்டி போலீசில், கண்ணன் மனைவி மெசியா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை