உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணி நிரந்தரம் கோரி மின் ஊழியர் தர்ணா

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியர் தர்ணா

ஈரோடு;தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், ஈரோடு, ஈ.வி.என்., சாலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபுட்டனர். மண்டல செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பிரிவுக்கு, 2 பேரை கள உதவியாளர்களாக ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்களில் பொது கட்டுமான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை