உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யூனியன் தலைவர் "சீட் வாங்கநம்பியூர், டி.என்.பாளையம் அ.தி.மு.க.,வில் கடும் போட்டி

யூனியன் தலைவர் "சீட் வாங்கநம்பியூர், டி.என்.பாளையம் அ.தி.மு.க.,வில் கடும் போட்டி

கோபிசெட்டிபாளையம்:உள்ளாட்சி தேர்தலில் நம்பியூர், டி.என்.பாளையம் யூனியன்களில் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு 'சீட்' பெறுவதில் அ.தி.மு.க.,வில் கடும் போட்டி நிலவுகிறது.நம்பியூர் யூனியனில் தற்போது, அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா நான்கு கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை என 13 கவுன்சிலர்கள் உள்ளனர். நம்பியூர் யூனியனில் காங்கிரஸ், - அ.தி.மு.க., - தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் தலைவர்கள் மாறி மாறி பதவி வகித்துள்ளனர். நம்பியூர் யூனியன் தலைவர் பதவி இந்த முறை பெண் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு யூனியன் சேர்மன் பதவியையும் பிடிக்க, அ.தி.மு.க., தரப்பில் பெண்கள் பலரும் போட்டி போட்டு விருப்ப மனு அளித்துள்ளனர்.நம்பியூர் யூனியன்: அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர விசுவாசியான துணைச் செயலாளர் சுலோச்சனா நடராஜ் இரு முறை சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வில் 'சீட்' கேட்டு வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்முறை யூனியன் தலைவர் பதவிக்கு கட்சி வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். செல்வி, ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர் செல்லக்கண்ணு, மகளிர் அணி ராஜேஸ்வரி, லிங்கம்மாள் குழந்தையப்பன், அம்சாதேவி உள்பட 56 பேர் யூனியன் கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளனர்.நம்பியூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வில் நம்பியூர் செயலாளர் கமலம், முத்துலட்சுமி, சாந்திவரதராஜ், வளர்மதி, ஜெயலட்சுமி உள்பட ஏழு பேர் மனு அளித்தனர். இவர்களில் கமலத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.டி.என்.பாளையம் யூனியன்: யூனியன் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பழனிசாமி உள்பட 13 பேர் மனு அளித்துள்ளனர்.நம்பியூர், டி.என்.பாளையம் யூனியன்களில் யூனியன் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு 'சீட்' பெறுவதில் அ.தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. சீட் பெறுவதில் அமைச்சர் செங்கோட்டையனின் ஆசியை பெறுவதிலும், சிபாரிசு பெறுவதிலும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை