உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 200 கார், லாரி சகிதம்வேட்புமனு தாக்கல்

200 கார், லாரி சகிதம்வேட்புமனு தாக்கல்

காங்கேயம்: காங்கேயம் பஞ்சாயத்து யூனியனில் நத்தகாடையூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏ., ஆதரவாளர் 200 கார், லாரி, வேன் புடைசூழ வந்து வேட்புமனு தாக்கல் செய்ததால், காங்கேயம் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது.நத்தகாடையூர் பஞ்சாயத்து தலைவராக, எம்.எல்.ஏ., நடராஜ் ஆதரவாளர் ஜெகதீசன் மனைவி கற்பகம் உள்ளார். மீண்டும் போட்டியிடும் இவர், நேற்று காலை நத்தகாடையூரிலிருந்து கார், லோடு ஆட்டோ, லாரி போன்ற 200 வாகனங்களில் அணிவகுத்து, மனு தாக்கல் செய்ய புறப்பட்டு காங்கேயம் வந்தனர். தொடர்ந்து வரிசையாக வாகனங்கள் சென்றதால், நேற்று காலை நத்தகாடையூரிலிருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோட்டிலிருந்து வரும் லாரி, பஸ் போன்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.பழையகோட்டை ரோட்டிலிருந்து, சென்னிமலை ரோடு வழியாக அனைத்து வாகனங்களும் பஞ்சாயத்து யூனியன் வரை வந்ததால், காங்கேயம் நகர்ப்பகுதியில் பிற வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. மனுத்தாக்கல் செய்துவிட்டு பகல் 1.30க்கு வாகனங்கள் திரும்பி சென்ற பின்னரே போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை