உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளிகளில் நேற்றுஆயுதபூஜை விழா

பள்ளிகளில் நேற்றுஆயுதபூஜை விழா

ஈரோடு: காலாண்டு தேர்வு விடுமுறையின் காரணமாக துவக்கப்பள்ளிகளில் முன்கூட்டியே நேற்று ஆயுதபூஜை போடப்பட்டது.பள்ளிகளில் நேற்று முன்தினம் காலாண்டு தேர்வு முடிந்தது. வரும் 9ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு சில பள்ளிகள் நேற்றே சரஸ்வதி பூஜையை நடத்தின. துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பகுதி ஏ.இ.ஓ.,க்கள் அனுமதியுடன் நேற்று சரஸ்வதி பூஜை விழாவை நடத்தினர்.ஈரோடு காசிபாளையம் யூனியன் துவக்கப் பள்ளியில், நேற்று ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் நேற்று மதியம் 12 மணியளவில் சரஸ்வதி படம் வைத்து பூஜை நடந்தது. பள்ளி மாணவ, மாணவியரின் நோட்டுப் புத்தகங்கள், அலுவலக பதிவேடுகள் அனைத்தும் வைத்து பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை