தீக்குளித்த பெண் சாவுவீடும் எரிந்ததால் பரபரப்புஈரோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, சூரியம்பாளையம், ராஜலிங்கம்பேட்டையை சேர்ந்த முருகானந்தம் மனைவி கஸ்துாரி, 42; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் சில ஆண்டாக கஸ்துாரி, கணவரை பிரிந்து, ஈரோட்டில் முனிசிபல் காலனி, வெள்ளி வீதியில் வாடகை வீட்டில் வசித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இந்நிலையில் அவர் தீக்குளித்த போது வீட்டுக்குள் அணைக்காத நெருப்பால், நேற்று காலை, 8:00 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். கட்டில், சோபா, பயன்பாட்டு பொருட்கள் எரிந்து விட்டது.வருவாய் துறை அலுவலர்கள்நான்காவது நாளாக ஸ்டிரைக்ஈரோடு: துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி இறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையில், 400க்கும் மேற்பட்டோர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வருவாய் துறை சார்ந்த பணி வெகுவாக பாதித்துள்ளது. மரத்தில் பைக் மோதியதில்தனியார் பஸ் டிரைவர் பலிகோபி: கோபி அருகே ஓடையாக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 33, தனியார் பஸ் டிரைவர்; சத்தி சாலையில் மாக்கினாங்கோம்பை என்ற இடத்தில், ேஹாண்டா பைக்கில் நேற்று காலை சென்றார். அப்போது நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தில் பலியான கார்த்திக் திருமணம் ஆகாதவர் என்று, கடத்துார் போலீசார் தெரிவித்தனர்.