உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் விதியால் தள்ளிப்போகும் ஜமாபந்தி நடத்தி முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேர்தல் விதியால் தள்ளிப்போகும் ஜமாபந்தி நடத்தி முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு: தேர்தல் நடத்தை விதிகளை காரணம் கூறி, வருவாய் துறையின் ஜமாபந்தியை முடிக்காமல், வருவாய் துறை கணக்குகளில் தீர்வு காணப்படாமல் உள்ளது.வருவாய் துறை சார்பில் ஆண்டு தோறும் 'வருவாய் தீர்வாயம்' எனப்படும் 'ஜமாபந்தி', மே - ஜூன் முதல் வாரத்துக்குள் நடத்தப்படும். கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., நிலை அதிகாரிகள், வருவாய் துறையில் உள்ள அனைத்து கணக்குகளையும் ஆய்வு செய்து, பெறப்பட்ட மனுக்கள், மாற்றம் செய்யப்பட்ட இனங்களை அனுமதித்து ஒப்புதல் வழங்குவர். தவிர மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பர். தற்போது லோக்சபா தேர்தல் நடத்தை விதியால் ஜமாபந்தி நடக்குமா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஜமாபந்தி நடத்தினால் மட்டுமே, அந்த ஆண்டில் வருவாய் துறை தொடர்பான அனைத்து ஆவணங்கள், பெயர் மாற்றங்கள், புதிய பதிவுகளுக்கு ஒப்புதல் வழங்கி, அதற்கான சான்றுகளை பெற முடியும். மேலும் கடந்தாண்டு ஜமாபந்திக்கு பின் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், பதிவுகளை ஆவணப்படுத்தி ஒப்புதல் வழங்க வேண்டும். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மாநில அரசிடம் பேசி, தேர்தல் ஆணைய அனுமதியுடன் விரைவாக ஜமாபந்தியை நடத்த வேண்டும். ஒருவேளை இந்தாண்டு ஜமாபந்தி நடக்காமல் போனால், பல வருவாய் துறை ஆவணங்களை உரிய திருத்தங்களுடன் பெற முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு கூறினர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ