உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்பத்தை உடைத்த யானைகளால் அச்சம்

கம்பத்தை உடைத்த யானைகளால் அச்சம்

சத்தியமங்கலம் : தாளவாடி அருகே திகினாரை கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த யானைகள், அப்பகுதியில் இருந்த மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் கம்பத்தை உடைத்து சேதம் செய்தன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி