உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சிலவரி செய்திகள்..

ஈரோடு சிலவரி செய்திகள்..

குன்றி மலைப்பகுதியில்கொட்டி தீர்த்த மழைசத்தியமங்கலம்: கடம்பூர் அடுத்த குன்றி மலைப்பகுதியில், நேற்று அரை மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. குன்றி சுற்றுவட்டார மலை கிராம பகுதிகளான மாகாளி தொட்டி, குஜ்ஜம்பாளையம், எப்பலுார், கரியகவுண்டன் பைல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. மதியம் 2:30 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. 3:00 மணி வரை தொடர்ந்து பெய்தது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. அரை மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வழிந்தோடியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.* நேற்று மதியம் கேர்மாளம், கோட்டமாளம், சுஜில்கரை ஆகிய வனப்பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை, 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதன் காரணமாக கேர்மாளம் பள்ளத்திலும், அணைக்கரை மரூர் பள்ளத்திலும் மழைநீர் நேற்று மாலை பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் வெப்பம் தணிந்தது. வனவிலங்குகளின் தாகம் தணிக்க போதுமானதாக இந்த மழை இருந்தது.* நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வரட்டுப்பள்ளத்தில் - 24.10 மி.மீட்டர் மழை பெய்தது. பவானிசாகர்-7, பெருந்துறை-1.3, கொடிவேரி-1 மி.மீ., மழை பதிவானது. ஆனால், பெரும்பாலான இடங்களில் மேக மூட்டமும், பலத்த காற்றும் வீசியது. இதில் கோபி பகுதியில் ஒரு வீடும், பெருந்துறை பகுதியில், இரு வீடுகளும் பகுதியாக சேதமடைந்தது.காரில் வந்து ஆடு திருட்டில்ஈடுபட்டவருக்கு தர்மஅடிகாங்கேயம், மே 16-திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் ஆடு, மாடுகள் அடிக்கடி திருடப்பட்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் செல்லும் சந்தேக வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை காடையூர் பகுதியில் சென்ற டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி மக்கள் சோதனை செய்தனர். அப்போது அதில் மூன்று ஆடுகள் இருந்துள்ளது. பொதுமக்கள் கிடுக்குபிடி விசாரணையில், ஆடுகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த மக்களில் சிலர், வாலிபரை கட்டி வைத்து நையபுடைத்து பின் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், காரில் வந்தவர் திண்டு க்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், 28, என்பது தெரியவந்தது. காயங்களுடன் இருந்தவருக்கு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வாலிபர் தப்பி விட்டார். காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வங்கியில் விடிய விடியஅலாரம் அடித்ததால் பரபரப்புசென்னிமலை: சென்னிமலை, இந்தியன் வங்கியில் விடிய, விடிய எச்சரிக்கை மணி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள இந்தியன் வங்கியில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விடிய, விடிய நேற்று காலை வரை எச்சரிக்கை மணி அடித்ததால், வங்கி அலுவலர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பின் காலை, 9:00 மணிக்கு மேல் வங்கி ஊழியர்கள் வந்து அலாரத்தை நிறுத்தினர். வங்கிக்குள் இருந்த பல்லி, ஏதாவது ஒன்றின் மீது விழுந்ததால், அலாரம் அடித்திருக்கலாம் என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.146 பள்ளிகளில் சிறப்பு பயிற்சி துவக்கம்ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 24,826 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 23,605 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 95.08 சதவீத தேர்ச்சியாகும். இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 189 அரசு பள்ளிகளை சேர்ந்த, 13,124 பேர் தேர்வு எழுதியதில், 12,123 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி, 92.37 சதவீதமாகும். மொத்தமுள்ள, 189 அரசு பள்ளிகளில், 43 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறாத, 146 பள்ளிகளில் தோல்வியுற்ற மாணவ, மாணவிகளை அடுத்த மாதம் நடக்க உள்ள உடனடி தேர்வில் பங்கேற்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தோல்வியுற்ற மாணவர்களுக்கு, 146 பள்ளிகளில் நேற்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது. இதில், தோல்வியுற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டும். எந்தெந்த பாடங்களில் தோல்வியுற்றுள்ளார்களோ, அப்பாட ஆசிரியர்கள், மாணவர்களின் வருகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவும், முழுமையான பயிற்சிகளை வழங்கி, உடனடி தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ள, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ