உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா ஜோர்

கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா ஜோர்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரி-யம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திரு-விழா கடந்த மாதம், 25ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்-கியது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நேற்று காலை நடந்தது.முன்னதாக கோவில் தலைமை பூசாரி முதலில் இறங்கி தீ மிதி விழாவை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து, 11:௦௦ மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.நாளை இரவு, 8:௦௦ மணிக்கு கோவில் கரகம் எடுத்தல், 9ம் தேதி காலை, 11:௦௦ மணிக்கு பொங்கல் வைத்தல், 10ம் தேதி இரவு கம்பம் எடுத்தல், 11-ம் தேதி மாலை, 6:௦௦ மணிக்கு மஞ்சள் நீராட்டம், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 12-ம் தேதி இரவு சுவாமி கோவில் நிலை சேருதலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை