உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில் இலவச கல்லீரல் ஆலோசனை முகாம்

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில் இலவச கல்லீரல் ஆலோசனை முகாம்

கோபி: கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை, கோபிசெட்டிபாளை-யத்தில் இலவச கல்லீரல் மருத்துவ ஆலோசனை முகாம் நடத்து-கிறது.இது குறித்து, மருத்துவமனையின் சிறப்பு கல்லீரல் நிபுணர்கள் கூறியதாவது: மது குடிப்பவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவு பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ஏற்க-னவே மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு ஆளானவர்கள், ஜீரண தொந்தரவு, கால் வீக்கம் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் தங்களது கல்லீரலின் நலம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்தி-யாவில் பெரும்பாலானவருக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி பாதிப்பு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாலும், 25 பேரில் ஒருவருக்கு பாதிப்பு இருக்கும் வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை-யுடன் கல்லீரல் பாதிப்பை கண்டறிய வேண்டும்.கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று பகுதி மக்கள் பயன்-பெறும் வகையில், வரும் 28-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை, 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை வைரவிழா முதல் நிலைப் பள்ளியில் இலவச மருத்துவம முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வோருக்கு, 5,000 ரூபாய் மதிப்புள்ள கல்லீரல் ஸ்கேன் மற்றும் ஹெப்படைடிஸ் பி அண்டு சி பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.குடல், கணையம் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன், கல்-லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பாரி விஜய-ராகவன் மற்றும் டாக்டர் விஸ்வகுமார் முகாமில் ஆலோசனை வழங்கவுள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரம் பெற, 98940 08800 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி