உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி வட்டார வேளாண் ஆபீசுக்கு தெரிந்தது வழி

கோபி வட்டார வேளாண் ஆபீசுக்கு தெரிந்தது வழி

கோபி : கோபி யூனியன் ஆபீஸ் வளாகத்தில், கோபி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் இயங்கியது. அதே வளாகத்தின் பின் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு விரிவாக்க மையம், கடந்த பிப்., மாதம் இடமாற்றம் செய்யப்பட்டது. அதுகுறித்த அறிவிப்போ, வழிகாட்டி பலகையோ, முன்பிருந்த பழைய அலுவலக கட்டடத்தில் வைக்கவில்லை. இதனால் பழைய கட்டடத்துக்கே சென்ற விவசாயிகள், இடமாற்றம் குறித்து விபரம் தெரியாமல் திரும்பி சென்றனர். இதுகுறித்து காலைக்கதிர் நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக இடமாற்றம் குறித்த பிளக்ஸ் பேனரை, பழைய கட்டடத்தில் வேளாண் துறையினர் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை