| ADDED : நவ 25, 2025 01:45 AM
ஈரோடு :பவானி அருகே அரசு பஸ் மீது மோதிய அதிவேக ஆம்னி பஸ்சால், கண்டக்டர் பலியானார். சேலத்தில் இருந்து திருப்பூருக்கு, உடுமலை அரசு டிப்போ பஸ் நேற்று காலை புறப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானி, லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றது. அப்போது பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி அதிவேகமாக அதே திசையில் வந்த ஆம்னி பஸ், அரசு பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது. இதில் பின்புறத்தில் நின்றிருந்த அரசு பஸ் டிரைவர் மகேஸ்வரன்,40, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடுமலையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் காளிமுத்து, 45, உடல் நசுங்கி பலியானார். தனியார் ஆம்னி பஸ் டிரைவர் கண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அரசு பஸ்சில் பயணித்த, 10 பயணிகள், ஆம்னி பஸ்சில் பயணித்த ஐந்து பேர் என, 15 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதலுதவி பெற்று சென்றனர். சித்தோடு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.