உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு; உயர்வை குறைக்க கோரி முறையீடு

நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு; உயர்வை குறைக்க கோரி முறையீடு

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் செல்வமணி தலைமையில், மனு வழங்கப்பட்டது.அதன் பின் அவர்கள் கூறியதாவது: தமிழக அரசு, தற்போது நடைமுறைப்படுத்த இருக்கும் நிலத்துக்கான அரசு வழிகாட்டி மதிப்பு, 70 சதவீதம் வரை உயர்த்துவதாக தகவல் அறிந்தோம். மார்க்கெட் விலையில் இருந்து உயர்த்துவதற்கு, தற்போது சர்வே எடுத்து வருகிறது. ஏற்கனவே முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது. 70 சதவீத அரசு வழிகாட்டி மதிப்பின் உயர்வால், 10 ஆண்டுகளுக்கு நிலங்கள், வீடு விற்பனையும், கட்டுமானமும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கும்.வழிகாட்டி மதிப்பீடு உயர்வால், வீடு, நிலம் வாங்குவோர், விற்போர், எங்களை போன்ற முகவர்கள், தரகர்கள் மட்டுமின்றி கட்டுமான துறை, அதனை சார்ந்த அனைத்து துறைகளும் கடுமையாக பாதித்து, வேலைவாய்ப்பை இழக்கும். தற்போதைய அறிவிப்பை திரும்ப பெற்று, அரசு கொண்டு வரும் வழிகாட்டி மதிப்பு உயர்வை, 5 முதல், 10 சதவீதம் மட்டும் உயர்த்தி, பொதுமக்களையும், இதனை சார்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும். அல்லது, நிலம், வீடு வாங்குவோர் கனவுகள் பாதிக்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை