உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொல்லான் நினைவிடம் கட்ட இடம் கொடுத்த 6 பேருக்கு வீடு கட்ட ஆணை

பொல்லான் நினைவிடம் கட்ட இடம் கொடுத்த 6 பேருக்கு வீடு கட்ட ஆணை

ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவச்சிலையுடன், ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில், நினைவரங்கம் அமைக்கப்பட்டது. இதற்காக இடம் வழங்கிய, ஆறு பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. ஆறு பேருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:பொல்லான் நினைவிடம் அமைக்க ஜெயராமபுரத்தில், ஒரு ஏக்கர் இடம் பார்த்தபோது, ஆறு குடும்பத்தார் பல ஆண்டாக வசித்து வந்தனர். அவர்களுக்கு பட்டா இல்லை. இருப்பினும், நினை-விடம் அமைவதை விளக்கி, அவர்களுக்கு வேறிடத்தில் தற்கா-லிக வீடு வழங்கி தங்க வைத்துள்ளோம். அவர்களது வீடு இடித்து அகற்றப்பட்டதால், அரசு சார்பில் வீடு கட்டித்தர திட்ட-மிடப்பட்டது. அவர்களது மனை டவுன் பஞ்., பகுதியில் உள்-ளதால், அரசின் வீடு கட்டும் திட்டத்தில் உதவ முடியவில்லை. இதுபற்றி முதல்வரிடம் பேசி, ஆறு பேருக்கு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று, இங்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்-பட்டுள்ளது. வரும், 28ல் பொல்லான் நிகழ்ச்சி அரசு மூலம் நடத்-தப்படுகிறது. பொல்லானுக்கு உதவிகரமாக இருந்தவர்கள் என வேறு நபர்களுக்கு நினைவிடம், சிலை அமைக்க கோரிக்கை வரும் பட்சத்தில், வரலாற்று ஆவணங்களுடன் ஒப்பிட்டு அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.பா.ஜ., முயற்சிபொல்லான் நினைவிடத்துக்கு இடம் வழங்கியவர்கள் உட்பட பலருக்கு பட்டா, வீடு கட்ட ஆணை வழங்காமல் இழுத்தடிக்கப்-பட்டனர். கடந்த திங்கள் அன்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் பா.ஜ.,வினர், பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மனு வழங்கிய நிலையில், இந்த ஆறு பேருக்கு வீடு கட்ட ஆணை தரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை