உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்

ஈரோடு:தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை கண்டித்தும், போதை பொருட்கள் கடத்தலில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தி.மு.க.,வினரை கைது செய்யக்கோரியும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில், நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.இதன்படி ஈரோட்டில், பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு மருத்துவமனை ரவுண்டானா, மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்கா வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் எம்.பி., செல்வகுமாரசின்னையன், நிர்வாகிகள் மனோகரன், ஜெகதீசன், முருகானந்தம், கேசவமூர்த்தி, ரத்தன் பிரத்வி உட்பட பலர் பங்கேற்றனர்.*கோபியில் எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அ.தி.மு.க., நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிநாதன், வேலுமணி, முன்னாள் நகர செயலாளர் கந்தவேல் முருகன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர். கோபி புதுப்பாளையம் முதல், கச்சேரிமேடு வரை மனித சங்கிலியாக நின்றனர்.* நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, ஒன்றிய அ.தி.மு.க, செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் நம்பியூர் பேரூராட்சி அ.தி.மு.க., செயலாளர் கருப்பணன்,, ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனிச்சாமி, மணிகண்டமூர்த்தி உள்பட, 500க்கும் மேற்ப்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டி.என் பாளையத்தில் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ஹரி பாஸ்கர் தலைமையில், அண்ணாதுரை சிலை முன் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. வாணிபுத்துார் பேரூர் கழக செயலாளர் ரமேஷ் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில், புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மனித சங்கிலி கோவை சாலை, திரு.வி.க.,கார்னர் வரை நீண்டது. நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவராஜ் மற்றும் தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.* பெருந்துறை ஒன்றியத்தில் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோவில் டவுன் பஞ்.,களில் மனித சங்கி போராட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித் ராஜ், பெருந்துறை யூனியன் சேர்மேன் சாந்திஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* ஆப்பக்கூடல் அ.தி.மு.க., செயலாளர் கவிவர்மன் தலைமையில், ஆப்பக்கூடல் நால்ரோட்டில் மனித சங்கிலி நடந்தது. இதேபோல் அந்தியூர் ரவுண்டானாவில், கோவை மண்டல பொருளாளர் மோகன் குமார், அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ