| ADDED : ஜூலை 25, 2024 01:46 AM
ஈரோடு: ஈரோடு பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில், ஐந்தாம் தளத்தில், 40 படுக்கைகளுடன் கேன்சர் சிகிச்சை பிரிவு துவங்கப்-பட்டுள்ளது.இது குறித்து, ஈரோடு மாவட்ட இணை இயக்குனர் (மருத்துவம்) அம்பிகா சண்முகம் கூறியதாவது: ஈரோடு அரசு மருத்துவமனை, புதிய கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில், 40 படுக்கைகளுடன் கேன்சர் பிரிவு செயல்படுகிறது. டாக்டர் அய்யப்பன் உட்பட, 2 கேன்சர் மருத்துவர்கள் சிகிச்சை வழங்குகின்றனர். ஹீமோ தெரபி சிகிச்சை வழங்கப்படுகிறது. கேன்சர் அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லை. இங்கு, 7 ெஹப்போ பில்டர் அமைக்க கோரி, 4 எண்ணிக்கையில் வந்துள்-ளது. விரைவில், அவை அமைக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை துவங்கும்.கேன்சர் பிரிவுக்கு என தனியாக ரேடியோ தெரபி வழங்க, ரேடி-யோலஜி டாக்டர் நியமிக்கப்படவில்லை. விரைவில் நியமிக்க நட-வடிக்கை எடுக்கப்படும். தற்போது பொதுவாக உள்ள ரேடியோ-லஜி டாக்டர் சிவகுமார் மூலம் சிகிச்சைக்கான யோசனை பெறப்-படுகிறது. இப்பிரிவு துவங்கிய பின் தினமும், 20 பேர் வரை கேன்சர் பரிசோதனைக்காக வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கி, தேவையான பரிசோதனைக்கு பின், அவர்களுக்கு கேன்சர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி தெரிவிக்கிறோம். குறிப்பாக, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் அதிகமாக வருகி-றது. அவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறோம். இவ்வாறு கூறினார்.