| ADDED : மார் 03, 2024 01:44 AM
ஈரோடு;ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.இதில், பல்வேறு சமூக நலப் பணிகளுக்காக ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் ஆற்றல் அசோக்குமாருக்கு, பொதுநல வேந்தன் விருதை, ஈரோடு அக்னி ஸ்டீல்ஸ் இயக்குனர் சின்னச்சாமி வழங்கி கவுரவித்தார்.ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன், வேளாளர் கல்லுாரி செயலாளர் சந்திரசேகர், முதல்வர் ஜெயந்தி, ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்வி நிறுவனர் மக்கள் ராஜன், ஈரோடு சுதா ஹாஸ்பிடல் டாக்டர் தனபாக்கியம், அன்னபாரதி மற்றும் சென்னை மீடியா செளகத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.விருது பெற்ற ஆற்றல் அசோக்குமார் பேசுகையில்,''அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளையை துவக்கினேன். பள்ளி கல்லுாரி மாணவ மாணவிகள் ஊக்கப்படுத்தியதோடு பள்ளிகளை மேம்படுத்தினோம். சமுதாயக்கூடங்களை திறந்தோம். உணவு தேவையை பூர்த்தி செய்தோம். தற்போது பெற்ற பொதுநல வேந்தன் விருது சமுதாய பணிகளை மேலும் சிறப்பாக செய்திட ஊக்கப்படுத்துகிறது. ஈரோடு மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை நற் சேவைகள் வழங்கும்,'' என்றார்.