உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாடு திருடிய களவாணி கைது

மாடு திருடிய களவாணி கைது

காங்கேயம் : காங்கேயம் அருகே வீரணம்பாளையம், கல்லாங்காட்டை சேர்ந்தவர் அருண் சிவபிராசாத், 27; தோட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 2௭ம் தேதி காலை தோட்டத்துக்கு சென்றபோது, மாடு, கன்றை காணவில்லை. காங்கேயம் போலீசில் புகாரளித்தார். அப்பகுதியில் உள்ள ஒரு 'சிசிடிவி' கேமரா பதிவில், மாட்டை திருடி சென்ற ஆசாமியை கண்டறிந்தனர். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தேஷ்குமாரை கைது செய்து, மாடு மற்றும் கன்றை பறிமுதல் செய்தனர்.காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி