உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மருமகள் இறப்பு மாமியார் புகார்

மருமகள் இறப்பு மாமியார் புகார்

கோபி, சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிச்சாமி, 36; இவரது மனைவி லட்சுமி, 29; தம்பதிக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான லட்சுமி, பிரசவத்துக்காக கோபி அரசு மருத்துவமனையில், கடந்த அக்.,24ல் சேர்க்கப்பட்டார். அக்.,29ல் சுகபிரசவமாக ஆண் குழந்தை பிறந்தது. கடந்த, 3ம் தேதி லட்சுமிக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மறுநாள் லட்சுமி உடல்நிலை மோசமானது. இதன் பிறகு கர்ப்பபை சீல் பிடித்து விட்டதாக கூறி, 11ம் தேதி மருத்துவர்கள் அகற்றிய நிலையில், லட்சுமி உடல்நிலை மீண்டும் மோசமானது. இதனால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மாலை இறந்தார். லட்சுமியின் இறப்பு சம்பந்தமாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அவரின் மாமியார் சந்திராம்மாள், 56, கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை