உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிலம் கொடுத்தோருக்கு எம்.பி., மரியாதை

நிலம் கொடுத்தோருக்கு எம்.பி., மரியாதை

டி.என்.பாளையம்: திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கனவு திட்டமான, அவினாசி-அத்திக்கடவு திட்டம், நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆறு நீரேற்று நிலையங்களில் ஒன்று நம்பியூரை அடுத்த வரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று நடந்த தொடக்க விழாவில், திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., தலைவர் சரவணன், நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் பங்கேற்றனர். நீரேற்று நிலையத்துக்கு வந்த தண்ணீரில், மலர் துாவி வரவேற்றனர். நீரேற்று நிலையத்துக்கு, 2.5 ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, எம்.பி., சுப்பராயன், சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ