உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மா.திறனாளிகள் தின கொண்டாட்டம்

நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மா.திறனாளிகள் தின கொண்டாட்டம்

ஈரோடு:ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பு இணைந்து, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மூன்று சக்கர வாகன பேரணி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஈரோடு கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி., சுஜாதா மற்றும் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி, அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை சென்று முடிந்தது.முன்னதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க மாநில கூட்டமைப்பு மகளிர் பிரிவு தலைவி இளையரசி, வரவேற்று பேசினார். இதை தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜரத்தினம் தலைமையுரை ஆற்றினார். பேரணியில் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, கே.பி.எம்.ஆர்கிடெக் கார்த்திக் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி கலந்து கொண்டனார். ஸ்ரீமுருகப்பெருமாள் அன்னதானம் சமூக சேவகர் நலச்சங்க தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ