உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நேதாஜி தினசரி மார்க்கெட் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

நேதாஜி தினசரி மார்க்கெட் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட், கனி வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பொறுப்-பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைவராக சுப்பிரமணியம், செயலாளராக சாதிக் பாட்சா, பொருளாளராக கார்த்திக், துணை தலைவராக சுரேஷ், துணை செயலாளராக சரவணன் பொறுப்-பேற்று கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் சண்முகவேல் நிர்வாகிகளுக்கு பொறுப்பளித்து உறுதி மொழி ஏற்க செய்தார். விழாவில் மேயர் நாகரத்தினம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் செல்வம், ராஜா, லாரன்ஸ் ரமேஷ், மார்க்கெட் காய்கறி வியாபா-ரிகள் சங்க முன்னாள் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை