உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண் சத்துணவு அமைப்பாளர்களுக்கு, சமூக நலத்துறையில் உதவியாளர் பதவி உயர்வு அரசாணையை உடன் வெளியிட வேண்டும். 10, 20, 30 ஆண்டுகளாக பணி முடித்த ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களில், 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை தகுதி அடிப்படையில் நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்குவது போல கூடுதல் மைய பொறுப்பு படியை, 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்