உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக.,6ல் மாவட்ட அளவில் பாக்கு சாகுபடி கருத்தரங்கு

ஆக.,6ல் மாவட்ட அளவில் பாக்கு சாகுபடி கருத்தரங்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆக., 6 காலை, 10:00 மணிக்கு மாவட்ட அளவிலான பாக்கு சாகு-படி குறித்த கருத்தரங்கு நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, கவுந்தப்பாடி, அந்தியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் பாக்கு சாகுபடி செய்துள்ளனர். இதுபோன்ற விவசாயிகளும், பாக்கு சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளும் கருத்தரங்கில் பங்கேற்று பயன் பெறலாம். ரகங்கள், சாகுபடி முறைகள், களை மேலாண்மை, நீர் மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், அறுவடை தொழில் நுட்பங்கள், சந்தை வாய்ப்பு குறித்து நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் துறையினர் கருத்தரங்கில் பேசுகின்றனர். கூடுதல் விபரம் பெற, 94490 47484, 88835 02808 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மைராடா வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை