உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை ராணுவத்தினர் ப.போலீசார் காத்திருப்பு

துணை ராணுவத்தினர் ப.போலீசார் காத்திருப்பு

ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.,19ல் நடந்தது. ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம்), தமிழக பட்டாலியன் போலீசார் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார் சொந்த ஊர் செல்ல காத்திருக்கின்றனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: 6ம் தேதி (நேற்று) மாலை வரை தேர்தல் நடத்தை விதிமுறை உள்ளது. அதன் பின் இவர்களுக்கு ஊர் செல்ல அழைப்பு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. அழைப்பு வந்தவுடன், ௭ம் தேதி (இன்று) நள்ளிரவுக்குள், கிளம்பி சென்று விடுவர் என்று, மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ