உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

ஈரோடு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக, ஈரோடு மண்டல பருவ-கால பணியாளர்கள், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசா-மியை சந்தித்து மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது: தமிழ்-நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ஈரோடு மண்டலத்தில் பருவ கால எழுத்தர், பருவ கால காவலர்களாக நெல் அறுவடை காலங்களில் மட்டும் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். அவ்-வப்போது இப்பணிக்கு ஆட்களை எடுத்து, ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டும் பணி வழங்கி, 8,500 ரூபாய் சம்பளம் வழங்கினர். பணிகள் இல்லாத ஒன்பது மாதங்களும், வெளியே கிடைக்கும் பணிகளை செய்து வருகிறோம். அரசு சார்பில் எங்களை முழு நேர பணியாளராக நியமித்து, நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ